2 வாக்குச்சாவடியில் ஓட்டு போட்ட தி.மு.க. பெண் கவுன்சிலர்: பதவி நீக்கம் செய்ய நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் வழக்கு!
By : Thangavelu
திமுகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் மஞ்சுளா தேவி என்பவர் இரண்டு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தியுள்ள நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் திருச்சி நீதிமன்ற கதவை தட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட முத்துலட்சுமி என்பவர் கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள 647வது வாக்குச்சாவடிக்கு வாக்கு செலுத்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் உங்க வாக்கினை செலுத்தியாச்சி என்று சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நான் இப்போ தான் வரேன் என்னோட வாக்கு எப்படி யார் போட்டது என்று தகராறு செய்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் போட்டியிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் விசாரித்ததில், திமுக 56வது வார்டு வேட்பாளர் மஞ்சுளாதேவிக்கு மற்றொரு வாக்குச்சாடியில் வாக்கு உள்ளது. ஆனால் அவர் 647வது வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். இதற்கிடையில் 646வது வாக்குச்சாவடியிலும் மஞ்சுளாதேவி வாக்களித்துள்ளார்.
இதனை அறிந்த மற்ற வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் 4,323 வாக்குகள் வித்தியாசதத்ல் வெற்றியும் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் கவிதா என்பவர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் போட்டுள்ளார். இதனை நீதிமன்றம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இதன் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Vikatan