Kathir News
Begin typing your search above and press return to search.

INDI கூட்டணி ஆசை தூள் தூளானது!!

INDI கூட்டணி ஆசை தூள் தூளானது!!

SushmithaBy : Sushmitha

  |  27 Dec 2023 3:04 PM GMT

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க கூடாது என்பதையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்திய அளவில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் போன்ற 26 கட்சிகள் ஒன்றிணைத்து கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி பெங்களூருவில் எதிர்க்கட்சி கூட்டணியின் இரண்டாவது கூட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது அக்கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.


அதாவது கூட்டணிக்கு ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயருக்கு பதிலாக இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி INDI என்று பெயரிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தனர். அதோடு காங்கிரஸ் தலைவர் மல்லி காஜூன கார்கே நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்காக கூட்டப்பட்ட முக்கியமான ஒரு கூட்டம் இது! நாட்டின் நலனுக்காகவே நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றிணைந்து உள்ளோம் என்று பேசியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து INDI கூட்டணியின் மூன்றாவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது அந்த கூட்டத்திற்கு பிறகும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார் என்றும் ஒட்டு மொத்த ஊடகங்களையும் அவர் கைப்பற்றியுள்ளார் என்றும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார்.


அதற்குப் பிறகு INDI கூட்டணி 5 மாநிலங்களின் தேர்தலில் தீவிரமாக இறங்கியது அதில் INDI கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் வேளைகளில் ஈடுபட்டிருந்தது. ஆனால் ஐந்து மாநிலங்களின் தேர்தலில் மூன்று மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தது அதிலும் குறிப்பாக காங்கிரஸின் ஆட்சி இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களையும் பாஜக ஆட்சியைப் பிடித்தது INDI கூட்டணியின் படுதோல்வியை குறித்தது.


இதனைத் தொடர்ந்து INDI கூட்டணியின் கட்சிகளுக்கிடையே சில சலசலப்புகள் அதனால் குறிக்கப்பட்ட தேதியில் நான்காவது கூட்டம் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏ பி பி - சி வோட்டர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து 2024 ஆம் ஆண்டு தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிவதற்கு கடந்த டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 21ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள வாக்குரிமை பெற்ற மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.


நாடு முழுவதும் வாக்குரிமை பெற்ற மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவில் 295 தொகுதிகள் முதல் 335 தொகுதிகள் வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 165 முதல் 205 இடங்களை INDI கூட்டணி வெல்லும் என்று கருத்துக்கணிப்பின் முடிவில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிக்கிறதாக 47.2 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கும் பாஜக தற்போது மீண்டும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்ற பாஜகவிற்கு சாதகமான முடிவுகளே இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது INDI கூட்டணியை சேர்ந்த கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News