Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்திக்கு 'அவமானம்' - ஒபாமா மீதே FIR கோரி நீதிமன்றத்தில் வழக்கு.!

ராகுல் காந்திக்கு 'அவமானம்' - ஒபாமா மீதே FIR கோரி நீதிமன்றத்தில் வழக்கு.!

ராகுல் காந்திக்கு அவமானம் - ஒபாமா மீதே FIR கோரி நீதிமன்றத்தில் வழக்கு.!

Saffron MomBy : Saffron Mom

  |  20 Nov 2020 9:35 AM GMT

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புத்தகம் 'தி ப்ராமிஸ்டு லேண்ட்', உலக தலைவர்களுடனான அவருடைய அனுபவங்களையும், அவர்களைப் பற்றிய அவரது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறது. இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இந்த புத்தகத்தின் முதல் பாகம் சில நாட்களில் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் அப்புத்தகத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்தும், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறித்தும் சில எதிர்மறையான கருத்துக்களை ஒபாமா வெளியிட்டிருப்பதாக செய்திகளில் வலம் வந்தது.

இந்நிலையில் இந்தப் புத்தகம் ராகுல்காந்தியின் பல்லாயிரக்கணக்கான 'தொண்டர்களின்' மனதை புண்படுத்துவதாக இருப்பதாகவும் அதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக FIR பதிய வேண்டும் என்றும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் ஒரு வழக்கறிஞர் சிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அகில இந்திய கிராம வழக்கறிஞர்கள் அசோசியேசனின் தேசிய தலைவரான ஞானபிரகாஷ் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளது. மன்மோகன்சிங் மற்றும் ராகுல் காந்தி பற்றி ஒபாமா கூறியது அவமானகரமானது என்றும் நம் நாட்டின் இறையாண்மை மீதான 'தாக்குதல்' என்றும் வழக்கறிஞர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த 'தலைவர்களுக்கு' மில்லியன் கணக்கான ஆதரவாளர்களும் தொண்டர்களும் இருப்பதாகவும் ஒபாமாவின் புத்தகத்தில் கூறிய கருத்துக்கள் மூலம் அவர்கள் மனம் புண்பட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொண்டர்கள் இப்புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வீதிகளில் இறங்கினால், அது பெரும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும் எப்ஐஆர் பதிவு செய்யப்படாவிட்டால் தான் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

இப்படி இந்த வழக்கறிஞரின் கோபத்தை தூண்டும் அளவிற்கு ஒபாமா என்ன கூறியிருந்தார்? ஒபாமா தனது நினைவுக் குறிப்பில் மன்மோகன்சிங்கை பற்றிக் கூறுகையில், சோனியா காந்தி அவரை பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு முக்கியமான காரணமே, அவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராகவும் காங்கிரஸ் தலைவராகவும் வருவதற்கு எவ்வித தடையாக இருக்க மாட்டார் என்பதுதான் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னுடைய பதவிக்காக சோனியா காந்தியிடம் பெருமளவு அவர் கடன்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியைப் பற்றி கூறுகையில், அவர் ஆசிரியரை மகிழ்விக்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கும் ஒரு மாணவரை போல் நடந்து கொண்டதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட பாடத்தில் எந்தவித திறமையோ அல்லது ஆர்வமோ அவருக்கு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர்கள் அமெரிக்காவின் ஜனநாயக கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் துணை அதிபரான ஜோ பிடேனுக்கு எனக்கு இத்தனை காலம் ஆதரவு அளித்து வந்ததால், ஒபாமா எழுதியதாக கூறப்படும் இத்தகைய எதிர்மறை கருத்துக்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று தெரியாமல் விழித்து வருகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News