Kathir News
Begin typing your search above and press return to search.

அவமதிக்கும் மம்தா பானர்ஜி - காலி ஆகும் தலைவர்கள் கூடாரம்?

அவமதிக்கும் மம்தா பானர்ஜி - காலி ஆகும் தலைவர்கள் கூடாரம்?

அவமதிக்கும் மம்தா பானர்ஜி - காலி ஆகும் தலைவர்கள் கூடாரம்?

Saffron MomBy : Saffron Mom

  |  29 Nov 2020 10:43 AM GMT

மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருட மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. 2019ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க 18 இடங்களில் வெற்றி பெற்று, ஆளும் திரிணாமுல் காங்கிரஸிற்கும் மம்தா பானர்ஜி கடும் போட்டியையும், நெருக்கடி கொடுத்தது.

40 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த கம்யூனிஸ்டுகளை, மூன்றாம் இடத்திற்கு தள்ளி தற்போது திரிணாமுல் காங்கிரஸ் vs பா.ஜ.க என்ற நிலைமை அங்கே ஏற்பட்டுள்ளது. இது மம்தா பானர்ஜிக்கு கடும் பீதியை உருவாக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது.

அவரது அமைச்சர்கள் மற்றும் MLAக்களுடன் நடக்கும் சந்திப்புகளில் கோபமுடன் சீறுவது, அவமதிப்பது ,கடுமையான கண்டனங்களை எழுப்புவது என மோசமான பாணியில் மம்தா பானர்ஜீ நடந்து கொள்வது ரகசியமான ஒரு விஷயம் அல்ல.

முதலமைச்சர் ஏதாவது ஒரு அமைச்சரை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவமதிப்பும் கண்டிப்பதும் செய்யாமல் எந்த அமைச்சரவைக் கூட்டங்களும் கடந்து சென்றதில்லை என்றும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அவருக்கு முன்னால், அவர் பேசிய பேச்சுக்கு மறு வார்த்தை பேசுவது அல்லது தங்களுடைய முறை வருவதற்கு முன்னாலேயே பேசுவது ஆகியவை மம்தா பானர்ஜி கடும் கோபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அவர் எந்த நேரம் எப்படி நடந்து கொள்வார் என்று யாராலும் கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அவர் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் மறு கருத்து இருந்தாலும் அதை தெரிவிப்பது அவருக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்துகிறது. என்ன கேட்க விரும்புகிறாரோ அதை மட்டுமே மற்றவர்கள் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் கணிசமான வெற்றியை தொடர்ந்து அவருடைய கோபமான மனநிலை அதிகரித்து வருவதாகவும், இதனால் அவ்வப்போது அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோரை செக்யூரிட்டி, பியூன் முன்னிலையில் கூட கண்டமாதிரி பேசி வருவதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அமைச்சர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மம்தா பானர்ஜி இப்படி பேசுவதை கூட தாங்கிக் கொள்ளலாம் என்று கூறும் பலரும், அவருக்கு அடுத்தபடியாக வாரிசு என்று தம்பட்டம் அடிக்காத குறையாக வலம் வருகின்ற அபிஷேக் பானர்ஜி தனது அத்தையை போலவே தனக்கும் எவ்வளவு மூத்த அமைச்சர்களாக இருந்தாலும் மரியாதை தரவேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் குறை கூறுகின்றனர்.

மம்தா பானர்ஜி & அபிஷேக் பானர்ஜி

தன்னைச் சுற்றி ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு எந்தவித களப்பணியும் செய்யாத இளைஞர்களின் பேச்சுக்களை எல்லாம் மூத்த அமைச்சர்களும், மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பலருடைய கோபத்திற்கும் தூண்டியுள்ளது.

மம்தா பானர்ஜியிடம் மோசமான நடவடிக்கைகள் இருந்தாலு,ம் அவர் இடதுசாரி அரசாங்கத்தை கடுமையாக போராடி வீழ்த்தினார் என்பது மறுக்க முடியாத ஒன்று. அவர் தன்னுடைய போராட்ட குணத்தினால் வெற்றியினால் அந்த மரியாதையை பெற்றுள்ளார். அபிஷேக் பானர்ஜி அப்படி எந்த குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நடத்தாத பட்சத்தில் வரம்பு மீறிய அதிகாரங்களை செலுத்துவது கட்சியில் பலரையும் எரிச்சலடைய வைத்திருக்கிறது.

மம்தா பானர்ஜியின் ஆதரவு இல்லாவிட்டாலும் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு செல்வாக்கு உடைய தலைவர்கள் அவமானங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

உதாரணமாக சுவெந்து ஆதிகாரி. மிட்னாபூர் இல் மிகுந்த செல்வாக்கு உடைய தலைவர். நந்திகிராம் போராட்டத்திற்கு, மம்தா பானர்ஜிக்கு ஆதரவை வழங்கி அப்பகுதிகளில் அவர் வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்தவர். தற்போது அபிஷேக் பச்சன் பானர்ஜியின் வளர்ந்து வரும் செல்வாக்கினால் தான் ஓரம் கட்ட படுவதாக கருதும் ஆதிகாரி தனது போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவருடைய தந்தை மற்றும் சகோதர இருவருமே எம்பிக்கள். தெற்கு வங்காளத்தின் மூன்று, நான்கு மாவட்டங்களில் இவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுவெந்து ஆதிகாரி

அவர்கள் பா.ஜ.கவில் விரைவில் சேர்வார்கள் என்ற வதந்தி பரவி வந்தாலும் இன்னும் அந்த செய்தி வரவில்ல. இவரை சமாதானப்படுத்த பிரசாந்த் கிஷோரை அனுப்பிவைத்தார் மம்தா பானர்ஜி. ஆனால் முடிவு என்ன பலனையும் அளிக்கவில்லை.

மம்தா பானர்ஜி & பிரசாந்த் கிஷோர்

மம்தா பானர்ஜியின் அவமானங்களும், அபிஷேக் பானர்ஜியின் வரம்பு மீறிய அதிகாரங்களும் அக்கட்சியிலிருந்து பலரை வெளியேற்றி கொண்டிருக்கிறது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் பலரும் அக்கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.கவிற்கு செல்வார்கள் அல்லது சுயேட்சையாக கூட போட்டியிடலாம் என்ற கருத்து நிலவுகிறது.

Courtesy: Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News