இனிமேல் நாங்கதான்: பஞ்சாயத்து தலைவர்களை மிரட்டி மாமூல் கேட்டு வரும் தி.மு.க. கவுன்சிலர்.!
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட அந்தரபுரம், திடல் உள்ளிட்ட பகுதிகளின் ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று 100க்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்தனர்.

பஞ்சாயத்து தலைவர்களை பணி செய்ய விடாமல் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மாமூல் தரவேண்டும் என்று திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஊராட்சி மன்றத்தலைவர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட அந்தரபுரம், திடல் உள்ளிட்ட பகுதிகளின் ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று 100க்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்தனர்.
அந்த புகாரில், தோவாளை ஒன்றிய திமுக கவுன்சிலர் பூதலிங்கம்பிள்ளை மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தானகுமார், குணா, குணசேகரன், ராஜாராம், உள்ளிட்டோர் பஞ்சாயத்து அலுவலக நிதியில் மாமூல் கேட்டு தங்களை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாக தெரிவித்தனர்.
மேலும், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திடல், தெள்ளாந்தி, அந்தரபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும், அங்கு ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் தாங்கள் என்று கூறி வருவதாக தெரிவித்தனர்.
ஊர்மக்களையும் மிரட்டி பெண் பஞ்சாயத்து தலைவர் ராஜலட்சுமி என்பவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறினர். எனவே பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி தமிழக முதலமைச்சர் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.