மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளுஅம்மாளை இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ஜனவரி 3ம் தேதி ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்துவதாக கூறியுள்ளார்.
மேலும், திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. திமுக தலைமையிடம் இருந்து எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை. ரஜினி சென்னை வந்தவுடன் கண்டிப்பாக அவரை சென்று சந்திப்பேன். ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுப்பேன். ஆதரவாளர்கள் சொன்னால் புதிய கட்சித் தொடங்குவேன். எனக் கூறினார்.
ஒரு வேளை இவர் கட்சி தொடங்கினால் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வாக்குகளை பெறுவார் என கூறப்படுகிறது. அப்படி ஆரம்பிக்கப்பட்டால் பாதிப்பு திமுகவிற்கு மட்டுமே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.