Kathir News
Begin typing your search above and press return to search.

காது குத்துனது பேரப்பிள்ளைக்கா? வருமான வரித்துறைக்கா? - அண்ணாமலை கேள்விக்கு தி.மு.க எம்.எல்.ஏ கப்சிப்

'காது யாருக்கு குத்துனீங்க? பேர புள்ளைக்கா அல்லது வருமான வரிக்கா? என தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

காது குத்துனது பேரப்பிள்ளைக்கா? வருமான வரித்துறைக்கா? - அண்ணாமலை கேள்விக்கு தி.மு.க எம்.எல்.ஏ கப்சிப்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2022 11:54 AM GMT

'காது யாருக்கு குத்துனீங்க? பேர புள்ளைக்கா அல்லது வருமான வரிக்கா? என தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தனது பேரனின் காதணி விழா மற்றும் மொய் விருந்து விழா கடந்த 23'ம் தேதி நடைபெற்றது. இந்த தினத்தில் நூறு கிடா வெட்டப்பட்டது, இந்த விருந்தில் 200க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 40 பணம் வசூலிக்கும் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு மொழி பணம் வாங்கப்பட்டது இந்த நோய் விருந்தில் 10 கோடி ரூபாய் வசூல் ஆனது தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றதில் இந்த மொய் விருந்துதான் அதிகபட்ச தொகை என கூறப்படுகிறது.

இந்த மொய் குறித்து விமர்சித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாவது, 'காது குத்தப்பட்டது தி.மு.க எம்.எல்.ஏ பேரப்பிள்ளைகளுக்கா, வருமானவரித்துறைக்கா?' என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டது, '11 கோடி ரூபாய்க்கு மேலே வசூல் இல்லாமல் இத்தனை பெரிய மொய் விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக யாரும் சரித்திரமே இல்லை, வாழ்வதற்கு வழியில்லாமல் பட்டினியில் சிக்கி தவிப்பவர்கள் வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வரும் கடைசி வாய்ப்பு மொய் விருந்து நடத்துவது. இதனை சுய லாபத்திற்காக 100 ஆடுகள் மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிக்கன் என தி.மு.க எம்எல்ஏ வேறு விதமாக நடத்தி இருக்கிறார்.

இந்த மொய் விருந்தில் சுமார் 40 கவுண்டர்களில் கட்டு கட்டாக வரும் பணத்தை கவனமாக எண்ணிப் பார்க்க பணம் எண்ணும் இயந்திரம் அதை உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க வங்கி அதிகாரி என குட்டி ரிசர்வ் வங்கியுடன் மொய் விருந்து நடத்தப்பட்டுள்ளதா இல்லையா?

இங்கேதான் துவங்குகிறது தி.மு.க'வின் விஞ்ஞானபூர்வமான ஊழல் திறமை, 2 லட்சத்திற்கும் மேல் காசோலையில் தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிகளை வைப்பது குற்றம்! வங்கியில் 50 ஆயிரத்துக்கு மேல் செலுத்த வருமானவரித்துறை கேட்கும் கருப்பு பணம் வெள்ளையாக வேண்டும் என சாமானிய மக்களுக்கு சொல்லுது சட்டம் ஆனால் அசோக்குமார் அடிச்சது ஒரே கல்லில் அஞ்சு, ஆறு மாங்காய்.

இந்த விஞ்ஞான போர் வித்தைகள் காட்டும் கைத்தறிந்த திறமைசாலிகள் தி.மு.க'வினர் இப்படித்தான் சமீபத்தில் தி.க தலைவருக்கு வீரமணி அவர்களுக்கு துடைக்கு எடை மக்கள் வழங்கும் கரன்சிகள் துலாபாலத்தில் வைக்கப்பட்டது. கரன்சிக்கு எதிர்முனையில் அமைந்த தராசை ஒருவர் முட்டி காலால் முட்டி கொடுத்தது சமூக ஊடகத்தில் வைரல் ஆனது.

மக்களை முட்டாளாக்க நினைக்கும் இவர்களின் கூட்டுக் கொள்ளைகள் இப்போதுதான் வெளிச்சப்பட்டு, மக்களுக்கு புரியத் துவங்கிவிட்டது. உண்மையான ஊழலற்ற தமிழகத்திற்கான வீடியோ காட்சி எப்போது என இயக்கத்துடன் விருந்துகளையும், துலாபாரத்தை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கேள்வியை அண்ணாமலை எழுப்பி கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகியும் 10 கோடி ரூபாய் தி.மு.க எம்.எல்.ஏ தரப்பில் இருந்து பதில் இல்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News