அதிமுகவுக்கு செல்கிறாரா கார்த்தி சிதம்பரம்.. மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!
அதிமுகவுக்கு செல்கிறாரா கார்த்தி சிதம்பரம்.. மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.!

By : Kathir Webdesk
தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களை காட்டிலும் போஸ்டர் கலாச்சாரம் மதுரையில் கொஞ்சம் ஓவராகவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில் அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., கார்த்தி சிதம்பரத்திற்கு செங்கோல் வழங்குவது போன்ற படத்துடன் எங்கள் வாத்தியாரே என்ற வாசகத்தோடு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்ற தொண்டர்களும் கொந்தளித்துள்ளனர்.
ஏற்கனவே காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு செங்கோல் வழங்கும் போஸ்டரால், அதிமுக, திமுக, காங்கிரஸ் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் பாஜக வேல் யாத்திரையின்போது எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தியது. இந்த நிகழ்வு சர்சசைக்குள்ளானது. தற்போது காங்கிரஸாரும் எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு வேளை கார்த்தி சிதம்பரம் அதிமுகவிற்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
