Kathir News
Begin typing your search above and press return to search.

உங்களுக்கு திறமை இல்லைன்னு மத்திய அரசு மேல பழியை போடாதீங்க - முதல்வர் ஸ்டாலினை விளாசும் அண்ணாமலை

போதை பொருள் பரவலுக்கு மத்திய அரசு காரணம் என அமைச்சர் பொன்முடி கூறியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

உங்களுக்கு திறமை இல்லைன்னு மத்திய அரசு மேல பழியை போடாதீங்க - முதல்வர் ஸ்டாலினை விளாசும் அண்ணாமலை

KarthigaBy : Karthiga

  |  3 Sep 2022 2:00 PM GMT

போதைப்பொருள் பரவலுக்கு மத்திய அரசே காரணம் என அமைச்சர் பொன்முடி கூறியதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதில் அளித்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனியார் மயமாக்கப்பட்டதினால் தான் போதைப்பொருள்கள் இந்தியாவில் நுழைகிறது என்பன போன்ற விசித்திரமான சில குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார் அமைச்சர் பொன்முடி.

2020ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் 115 கிலோ ஹெராயின் மற்றும் ஏ.டி.எஸ் எனப்படும் போதைப் பொருள் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகம் நனியார் துறைமுகமா? 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் மட்டும் தமிழகத்தில் 1,238.84 கிலோ போதைப் பொருட்களை போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது அமைச்சருக்கு தெரியாதா?2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 கிலோ ஹெராயின் தூத்துக்குடியில் பிடிப்பட்ட செய்தியை மறந்துவிட்டாரா?

போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தமிழக காவல்துறை கொடுத்த புள்ளி விவரத்தின் படி 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்ட கோகைனின் அளவு வெறும் 0.05 கிலோ ஆகும்.

பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து கடத்திக்கொண்டு வரப்படும் போதைப் பொருள் இதுவே. தமிழகத்தில் பெரிதாக புழக்கத்தில் இருப்பது கஞ்சா. தமிழகத்தில் போதை பொருள் விற்ற குற்றத்திற்காக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 742 பேர் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 771 பேர். 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,558 பேர் திமுக ஆட்சிக்கு வந்தபின் கைது அதிகமாகிவிட்டது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அமைச்சர் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் தான் தமிழகத்தில் எட்டு திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பதை உணர வேண்டும்

கடத்தி செல்லும் நபர்களை மட்டும் கைது செய்து வரும் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறை எங்கிருந்து இந்த கஞ்சா வருகிறது என்பதை ஆலோசிக்காமல் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகராக மாற்றியதுதான் அரசின் சாதனை.

டாஸ்மாக் மூலமாக மதுவிற்று ஒவ்வொரு தமிழனிடமும் சராசரியாக சென்ற ஆண்டு மட்டும் 5,000 வசூல் செய்த அரசு போதையை ஒழிக்கும் என்று எப்படி நம்புவது? தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மேல் பழி போடுவதை தி.மு.க நிறுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News