தி.மு.கவில் சேரும்போதே பொய் சொல்லி சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி - பொய், புரட்டுகளின் புகலிடமா தி.மு.க?
தி.மு.கவில் சேரும்போதே பொய் சொல்லி சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி - பொய், புரட்டுகளின் புகலிடமா தி.மு.க?
By : Mohan Raj
அரசியல்வாதிகளுக்கே உரித்தான ஒன்று பொய் பேசுவது அதில் சிலர் விதிவிலக்கு. அதிலும் தி.மு.க'வில் உள்ள தரைவர்கள் பொய் மட்டுமல்லாது ஊழல் வழக்குகள், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு என வழக்குகளில் சிக்கி பெயர் பெற்றவர்கள்.
ஆனால் ஒருவர் தி.மு.க'வில் சேரும் போதே பொய்'யுடன் சேர்ந்துள்ளார். காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் என இதுவரை அறியப்பட்ட கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக-வில் இணைந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் என ஊடகங்கள் இவரை கூறுகின்றன. சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்துகிறார். திராவிடம் இல்லை தமிழகம் இல்லை என இதுவரை கரைவேட்டி கட்டாத தி.மு.க'காரராக வலம் வந்தவர் இப்பொழுது சமுதாயத்தில் நாம் அடையாளம் காணப்பட்டுவிட்டோம் என தி.மு.க'வில் ஐக்கியமாகியுள்ளார்.
இவர் தி.மு.க'வில் ஐக்கியமானது பெரிய ஆச்சர்யம் இல்லை வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடந்த செப்டம்பர் 21'ம் தேதி இவரது ட்விட்டர் பதிவில் "தான் 1996 முதல் தி.மு.க உறுப்பினர் என கூறிவிட்டு" தற்பொழுது எதற்காக மீண்டும் தி.மு.க'வில் இணைய வேண்டும்? வெற்று விளம்பரமா அல்லது தி.மு.க'வில் சேரும் போதே பொய்யுடன் சேரும் பழக்கமா என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் அவர்களை விவாதத்திற்கு அழைத்திருந்தார். அப்பொழுது செந்தில்குமாருக்கு வரிந்து கட்டும் விதமாக தனது ட்விட்டர் பதிவில் "விவாதத்திற்கு நான் தயார்" என சவடால் விட்டார்.
அதற்கு அண்ணாமலையோ "நான் தி.மு.க'வில் பதவி மற்றும் பொறுப்புகளில் உள்ளவர்களை மட்டுமே தான் நான் விவாதத்திற்கு அழைத்தேன். உங்களை அல்ல" என்கிற தொணியில் பதிலளித்தார்.
அதற்கு பதில் தந்த கார்த்திகேய சிவசேனாதிபதியோ "நான் 1996 முதல் தி.மு.க'வில் உள்ளேன்" என்று தான் ஒரு உடன்பிறப்பு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால் இன்றோ தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க'வில் இணைந்துள்ளார். அப்படி செப்படம்பர் மாதம் 1996 முதலே தி.மு.க'வில் உள்ளேன் என கூறியது பொய்யா? அல்லது தற்பொழுது ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க'வில் இணைந்தது பொய்யா? கார்த்திகேய சேனாபதி'தான் விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க என்றேலே பொய், புரட்டுகளின் புகலிடம் ஆகிவிட்டதா?