தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு வந்த "விராலிமலை முருகன்" ஞாபகம் - இந்துக்களை கவர திட்டமா?
தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு வந்த "விராலிமலை முருகன்" ஞாபகம் - இந்துக்களை கவர திட்டமா?
By : Mohan Raj
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துக்கள் வாக்கு வங்கியே தி.மு.க'விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை தி.மு.க தரப்பினர் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகையினால் தன் சமீப காலமாக தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்ற பிரச்சார யுக்தியை கையாண்டு வருகிறது.
காரணம் இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது ஆகையினால் முதல்முறையாக வேட்பாளராக களம் காணும் ஸ்டாலின் அவர்களின் முதல்வர் கனவிற்கு ஏதும் பங்கம் வந்துவிட கூடாது என்ற பதவி ஆசையில் இதுநாள் வரையில் இந்துக்களின் திருநீறை கூட மதிக்காமல் நெற்றியில் வைத்தால் அழித்து வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று தான் முதல்வராக இந்துக்களின் மேல் திடீர் பாசம் காட்டுகிறார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் "என் மனைவி போகாத கோவிலே இல்லை" என தனது இந்து மத எதிர்ப்பை தேர்தலுக்காக சிறிது காலம் ஒதுக்கிவைத்த ஸ்டாலின் தற்பொழுது விராலிமலை முருகனிடம் திரும்பியுள்ளார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிரச்சார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சிக்கு விஜயம் செய்தார். அங்கு நடைபெற்ற தி.மு.கவின் மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் துணைக்கு விராலிமலை முருகனையும் அழைத்துள்ளார்.
அந்த கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது, "இந்த புதுக்கோட்டை மாவட்டமே தனி மாவட்டமாக தி.மு.க ஆட்சிகாலத்தில் தான், கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் பிரிக்கப்பட்டது. அது ஒரு பெரிய வரலாறு" என பெருமை பேசிய அவர் திடீரென முருகன் பக்கம் சாய்ந்தார், "விராலிமலை சுப்பிரமணியசாமி கோயில் தேரோட்டத்தை 22 ஆண்டுகளுக்கு பிறகு நடத்திக் காட்டியதும் கலைஞருடைய ஆட்சி தான், கலைஞர் தான் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்" என பிரச்சாரத்திற்கு முருகனை துணைக்கு அழைத்தார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டியை அவமதித்து வீடியோ வெளியிட்டபோது அதை பற்றி தமிழ்நாடே பேசும்போது ஏதும் பேசாமல் 'உம்' என இருந்துவிட்டு தற்பொழுது தேர்தல் வருகிறது என்ற உடன் விராலிமலை முருகனை பிரச்சாரத்தில் இழுப்பது எவ்விதத்தில் நியாயம் தி.மு.க தலைவரே என மக்களின் கருத்தாக உள்ளது.