Kathir News
Begin typing your search above and press return to search.

'ஆளுங்கட்சி ஆசியுடன் நடக்கிறதா இந்து மத கடவுளை இழிவுபடுத்துதல்?' - அண்ணாமலை ஆவேசம்

சுவாமி நடராஜர் குறித்து யூ2 புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் அவமரியாதையாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.

ஆளுங்கட்சி ஆசியுடன் நடக்கிறதா இந்து மத கடவுளை இழிவுபடுத்துதல்? - அண்ணாமலை ஆவேசம்

Mohan RajBy : Mohan Raj

  |  30 April 2022 5:21 AM GMT

சுவாமி நடராஜர் குறித்து யூ2 புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் அவமரியாதையாக பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு யூ 2 புரூட்டஸ் எனும் யூடியூப் சேனல் பகவான் நடராஜர் பற்றி அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர். அந்த வீடியோவில் இந்து மதக் கடவுளான நடராஜர் குறைத்து வருவதாகவும் அவரது நடன அசைவுகள் குறித்து மிகவும் ஆபாசமாகவும் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இந்து மக்கள் கட்சியினர் தலைவர் அர்ஜுன் சம்பத் காவல்துறை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'மதக் கோட்பாடுகள் மற்றும் இறை நம்பிக்கையாளனாக பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாக கொண்டவர்கள் சிலர்,

ஆளுங்கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள், இதுபோன்ற நபர்களை கண்டுகொள்ளாமல் அரசு என் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது? நடவடிக்கை எடுக்க தேவையான காலமாக நடந்து கொள்ளுமாறும் காலம் அவகாசம் கடந்த பின்னும் ஆளும் அரசு செயல்பட மறுப்பது ஏன்? அல்லது இச்சமூகத்தின் சகிப்புத்தன்மயை கண்டறிய இதுதான் நீங்கள் கண்டெடுத்த வழியா? பதிவிட்டுள்ளார்.



Source - One India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News