முதல்வராக ஆசைப்பட்ட பீகார் ப்ரியா - நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கிய பரிதாபம்!
முதல்வராக ஆசைப்பட்ட பீகார் ப்ரியா - நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கிய பரிதாபம்!

பீகார் தேர்தல் முடிவுகள் ரோலர் கோஸ்டர் போல மேலும் கீழும் வந்துகொண்டிருக்கின்றன. உறுதியான முடிவுகள் தெரிய பின்னிரவு வரை ஆகலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
SEE BOOTHWISE DATA, PLURALS VOTES STOLEN!
— Pushpam Priya Choudhary (@pushpampc13) November 10, 2020
பீகார் தேர்தல்களில் 28 வயதான, லண்டனில் சென்று படித்த புஷ்பம் பிரியா சவுத்ரி என்பவர் தேர்தலுக்கு சற்று முன்பாக ப்ளுரல்ஸ் பார்ட்டி (plurals party) என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து தன்னை அதற்கு முதல்வர் வேட்பாளராக அறிவித்து கொண்டார். இந்நிலையில் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர் நோட்டாவை விட குறைவான ஓட்டுகள் வாங்கி இருப்பது அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. எனவே தனது ஓட்டுகள் திருடப்பட்டு விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் பாணியில் அவர் அறிவித்துள்ளது பலருக்கும் வேடிக்கையாக உள்ளது.
BJP RIGGED THE ELECTION. PLURALS VOTES TRANSFERRED TO NDA ON ALL BOOTHS.
— Pushpam Priya Choudhary (@pushpampc13) November 10, 2020
பிஹாரில் பாட்னாவில் ஒரு தொகுதியிலும், மதுபானியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டார். ஒன்றில் நோட்டாவை விட குறைவான ஓட்டுகளும் மற்றொன்றில் வெறும் 121 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இரண்டு தொகுதிகளிலும் தற்போதைய தகவல்களின்படி பா.ஜ.க முன்னிலையில் வைக்கிறது.
அவர் 121 ஓட்டுகள் வாங்கிய தொகுதியில் நோட்டாவிற்கு தற்போதுவரை 189 வாக்குகள் வந்துள்ளது. முன்னாள் ஐக்கிய ஜனதாதள கவுன்சிலர் வினோத் சவுத்திரியின் மகளாவார். அவர் தேர்தலுக்கு சற்று முன்பாக கட்சியை ஆரம்பித்து தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கட்சியில், எஞ்சினியர்கள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என பலருக்கும் வாய்ப்பு கொடுத்து வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால் அவர் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.