மாணவர்களுக்கு திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம்.. முதல்வர் பழனிசாமி.!
மாணவர்களுக்கு திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம்.. முதல்வர் பழனிசாமி.!

மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். அதே போன்று மாணவர்களின் பெற்றோர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலமாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது.
தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்விச்செலவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பதாக கூறியிருந்தார். அவர் மீது மாணவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்தே மாணவர்களுக்கு திமுக ஸ்டாலின் உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம். எப்பவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக அரசு முழுமையாக உதவும். இவ்வாறு அவர் கூறினார்.