இஸ்லாமியர்கள் திருவாவளவன் பின்னால் செல்வது ஆபத்தானது.. எச்சரிக்கை செய்யும் வேலூர் இப்ராஹிம்.!
இஸ்லாமியர்கள் திருவாவளவன் பின்னால் செல்வது ஆபத்தானது.. எச்சரிக்கை செய்யும் வேலூர் இப்ராஹிம்.!
By : Kathir Webdesk
சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே சென்று, பொட்டு வைத்துக்கொண்டு தனது நாடகத்தை அரங்கேற்றுகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் என்றார், தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம்.
இது பற்றி சேலம் கோரிமேடு பகுதியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்து மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கக்கூடிய கடவுள் சிலைகளை பற்றி ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசி இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்த திருமாவளவன், பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போதும் இந்துக்களின் உணர்வை புண்படுத்தி வருகிறார்.
ஆனால், இப்போது தேர்தல் காலம் நெருங்கி வருவதால், சிதம்பரம் கோயிலுக்கு போய் பொட்டு வைத்துக்கொண்டு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என கூறினார்.
மேலும், தமிழக இஸ்லாமியர்கள் திருவாவளவன் பின்னால் செல்வது மிகவும் ஆபத்தானது. இதனை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் தீய சக்தியான திருமாவளவனை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமியர்களின் மதத்தோடு, திருமாவளவன் நெருக்கமாக இருந்து வரும் நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பாபர் மசூதிக்கு ஆதரவாக நகரம் முழுவதும் திருமாவளன் கட்சியினர் போஸ்டர் அடித்து ஓட்டி வரும் வேளையில், தமிழக இஸ்லாமியர்கள் திருவாவளவன் பின்னால் செல்வது மிகவும் ஆபத்தானது என கூறியுள்ளார்.
திருமாவளவன் போன்றோர்களை வரும் சட்டபேரவை தேர்தலில் ஆரம்பத்திலேயே கண்டறிந்து வெட்டி எறிய வேண்டும் என்பது ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.