'மரத்தை பிடுங்கியது உண்மைதான், என்னை திட்னாங்க தெரியுமா?' - மரத்தை பிடுங்கிவிட்டு தன்னிலை விளக்கம் கொடுக்கும் தி.மு.க கவுன்சிலர்
கோவை மாநகராட்சி 34 வது வார்டு கவுன்சிலர் மாலதி வீட்டு அருகில் உள்ள மரத்தை உடைத்து வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது.

By : Mohan Raj
கோவை மாநகராட்சி 34 வது வார்டு கவுன்சிலர் மாலதி வீட்டு அருகில் உள்ள மரத்தை உடைத்து வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுன்சிலர் மாலதி கார் நிறுத்தும் இடத்தில் மரம் நட்டதால் அதனை பிடுங்கி எறிந்து 'யார்கிட்ட வேணாலும் புகார் கொடுத்துகோ' என தி.மு.க கவுன்சிலர் மாலதி அந்த வீடியோவில் குறிப்பிடுகிறார். மாலதியின் வீட்டின் அருகில் நான்கு வேப்பமரக் கன்றுகளை மாலதி வீட்டில் அருகில் வசித்து வருபவர் சுபாஷ் நட்டுள்ளார்.
இதனை கூடாது என்று அந்த மரக்கன்றை தி.மு.க கவுன்சிலர் மாலதி பிடுங்கி எறிந்தார். இது தொடர்பாக சுபாஷ் காவல் நிலையத்தில் கவுன்சிலர் கார் நிறுத்துவதற்கு இடைஞ்சலாக இருந்த காரணத்தினால் நட்ட மரத்தை பிடுங்கி எரிந்ததாக புகார் அளித்துள்ளார்.
இவர் குறித்து மேலும் தகவல் சேகரித்த போது சுபாஷ் பா.ஜ.க'வை சேர்ந்தவர் என்பதால் அங்கு பா.ஜ.க மரம் நடும் விழா நடத்தியது இது பொறுக்க முடியாத தி.மு.க கவுன்சிலர் உடனே மாநகராட்சி நிர்வாகத்திற்கு உடனே புகார் அளித்தார்.
மேலும் அந்த மரத்தை பிடுங்கியது உண்மைதான் என தி.மு.க கவுன்சிலர் மாலதி ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு காரணம் 'அந்த இடத்தை ஆக்கிரமித்து மரம் நட்டு உள்ளனர், கேட்டதற்கு என்னை திட்டினார்கள்' தி.மு.க கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
