மகாபாரதத்தின் திரவுபதி பற்றி இந்த கட்சியினர் பேசுவதே அநியாயம் - நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு
ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்த கட்சி மகாபாரதத்தின் திரௌபதி பற்றி பேசுவது அநியாயம் என நிர்மலா சீதாராமன் கடுமையாக தாக்கியுள்ளார்.
By : Karthiga
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில் கனிமொழி எம்.பி மகாபாரதத்தின் திரவுபதிபதி பற்றி குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எங்கு நடந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. வேதனையானது அது. ஆனால் கனிமொழி ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 - ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுக்கப்பட்டது. அவர் அவமானப்படுத்தப்பட்டார்.
எல்லோரும் உட்காந்து சிரித்தனர். அன்று அவர் ஒரு உறுதிமொழி எடுத்தார். இனி "நான் இந்த அவைக்கு வரமாட்டேன். வந்தால் முதல் அமைச்சராகத் தான் வருவேன்" என்று உறுதிமொழி எடுத்தார். அதே மாதிரி இரண்டு ஆண்டுகள் கழித்து முதல் அமைச்சராக அவைக்கு திரும்பி வந்தார். அந்த கட்சி திரௌபதி பற்றி குறிப்பிடுகிறது. என்ன அநியாயம் இது? அது மட்டும் இல்ல ஒரு துயரைப் பார்த்து மவுனமாக இருப்பவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் அன்று மௌனமாக இருந்த தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனை கிடைக்காதா? என்று பேசினார்.
SOURCE :DAILY THANTHI