Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெ. நினைவிடம் மூடப்பட்டது ஏன்? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பான தகவல்.!

ஜெ. நினைவிடம் மூடப்பட்டது ஏன்? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பான தகவல்.!

ஜெ. நினைவிடம் மூடப்பட்டது ஏன்? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பான தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Feb 2021 12:34 PM GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கடந்த மாதம் 27ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனிடையே பொதுமக்கள் பார்வையிட பொதுப்பணித்துறை அனுமதி வழங்கிய நிலையில், நேற்று மீண்டும் பார்வையிடுவதற்கு தடை விதித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

இதனிடையே வருகின்ற 7ம் தேதி சசிகலா தமிழகம் திரும்ப உள்ளார். மேலும், அவர் ஜெயலலிதா நினைவிடம் சென்று பார்வையிடுவதாக தகவல் வெளியானது. இதற்குத்தான் நினைவிடத்தை தமிழக அரசு மூடியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் சசிகலா வருகையால் ஜெயயலிதா நினைவிடம் மூடப்பட்டதா என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இன்னும் சில பணிகள் நடைபெறுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி தற்காலிகமாக நினைவிடம் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News