அந்தோணிசாமியை இந்துவாக்கி, அதையே படமாக்கி காசு பார்க்கும் இடதுசாரி சூர்யா !
By : Mohan Raj
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியுடன் திரைப்படத்தை எடுத்திருப்பதால் நடிகர் சூர்யா மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களின் ஒரு வரலாற்று சம்பவத்தை மையமாக எடுக்கிறேன் என்ற பெயரில் பல சித்தரிப்புகளை திணித்து சூர்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியுள்ளது.
ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் படத்தில் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருக்கும், இந்த காட்சி எதிர்ப்புக்கு ஒரு காரணமாகியது. காரணம் இதன் அசல் சம்பவத்தில் இந்த கதாபாத்திரம் அந்தோணிசாமி என்கிற கிருஸ்துவர், ஆனால் நடிகர் சூர்யா காழ்ப்புணர்ச்சி காரணமாக வஞ்சத்துடன் இந்த காட்சியை மாற்றி காண்பித்துள்ளார்.
எதிர்ப்புகளை தொடர்ந்து இந்த காட்சியில் இடம் பெற்ற நாட்காட்டியில் படம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட படமும் மீண்டும் காழ்ப்புணர்ச்சியினால் இந்து கடவுளான மகாலெட்சுமி படமாக மாற்றப்பட்டதே தவிர அது அசல் கதையை போல் படமாக்கப்படவில்லை.
எப்படியாவது படம் எடுக்கிறேன் என்ற பெயரில் இடதுசாரி சிந்தனையை விதைக்கும் நடிகர் சூர்யாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது.