Kathir News
Begin typing your search above and press return to search.

"உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வை விரட்டியடிப்போம் !" - ஜெ நினைவிடத்தில் அ.தி.மு.கவினர் சூளுரை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5வது நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து சபதம் ஏற்றுக்கொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வை விரட்டியடிப்போம் ! - ஜெ  நினைவிடத்தில் அ.தி.மு.கவினர்  சூளுரை!

ThangaveluBy : Thangavelu

  |  5 Dec 2021 6:51 AM GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5வது நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து சபதம் ஏற்றுக்கொண்டனர். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்த இன்று அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தவறாமல் கருப்பு ஆடை அணிந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போன்று இன்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க மற்றவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதாவது வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிரிகளை வெற்றிபெறுவதற்கு விடமாட்டோம். ஒன்றாக இணைந்து எதிரிகளை வென்று காட்டுவோம். பொய் வழக்கால் நம்மை முடக்க நினைப்பவர்களின் ஆணவத்தை அடக்கி காட்டுவோம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மேலும், திமுக ஆட்சியில் தண்ணீரும் வடியவில்லை, தமிழகர்களின் வாழ்வும் விடியவில்லை என்றனர். தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்துபவர்களின் ஆட்டங்களை அடக்கிக்காட்டுவோம் என்று சூளுரைத்தனர். வரும் தேர்தல் திமுகவுக்கு சவுக்கடியாக அமையும் எனவும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Aiadmk Facebook

Image Courtesy:Vikatan


Next Story
கதிர் தொகுப்பு
Trending News