ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் முயற்சியை தி.மு.க. கைவிட வேண்டும் ! - அண்ணாமலை!
தமிழக நலனுக்காக அதிமுக, பாஜகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
By : Thangavelu
தமிழக நலனுக்காக அதிமுக, பாஜகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தென்காசி, நெற்கட்டும் செவல் பூலித்தேவன் பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஆட்சி மாறும்போது முந்தைய முதலமைச்சர் பெயர்களில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்கதையாகி உள்ளது.
இது போன்ற நடைமுறையை இந்த அரசாவது கைவிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் எடுத்துக் கூறியுள்ளனர். எனவே அரசு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கின்ற முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: News 7
Image Courtesy: Bjp Facebook
https://news7tamil.live/jeyalalitha-university-joining-issue.html