ஜெயலலிதா நினைவு மண்டபம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு.!
ஜெயலலிதா நினைவு மண்டபம்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு.!
By : Kathir Webdesk
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்., நினைவு மண்டபத்தில் அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நினைவு மண்டபம் அமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டது. தற்போது அந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் அவை திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.