"ஜெய்பீம் நல்ல படம்தான்! மற்ற சமூதாயத்தை காயப்படுத்தாமல் எடுத்திருக்க வேண்டும்" - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் நல்ல படம்தான் இருந்தாலும் மற்ற சமுதாயத்தை காயப்படுத்தாமல் எடுத்திருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
By : Thangavelu
"நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் நல்ல படம்தான் இருந்தாலும் மற்ற சமுதாயத்தை காயப்படுத்தாமல் எடுத்திருக்க வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜெய்பீம் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. முதல் நாளே படம் சர்ச்சைக்கு ஆளானது.
அதாவது படத்தில் கதை உண்மைக்கு மாறாக பொய்யாகவும் வன்னியர்களை தவறாக காட்டப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி காவல் ஆய்வாளர் வீட்டில் வன்னியர்களின் குறியீடான அக்னி கலசம் பொருத்திய காலண்டர் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. இதற்கு வன்னியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக பாமக தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தனர்.
அதிலும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சூர்யாவுக்கு ஏழு கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்காமல் சூர்யா தேவையில்லாத ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இது மேலும் வன்னியர்களை காயப்படுத்துவதாக இருந்தது. இதனால் பல மாவட்டங்களில் வன்னியர் இளைஞர்கள் சூர்யா ரசிகர் மன்றத்தை கலைத்தது மட்டுமின்றி சூர்யாவின் உருவப்படத்தை எரித்து தங்களின் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு உண்மைக் கதையை எடுத்துள்ளார். நீதியரசர் சந்துரு ஐயாவின் வாழ்க்கையை இந்தப் படத்தில் டெபிக்ட் பண்றாங்க. சில இடத்தில் உண்மை கதையை சரியாக காட்டியிருக்கலாம். அது மட்டுமின்றி அவர்களின் சமுதாயத்தையும் சொல்லியிருக்கலாம். படம் நல்லதாக இருக்கிறது. இருந்தாலும் உண்மை கதையில் இருந்த பெயர்களை சூட்டியிருக்கலாம். அதிலும் மற்ற சமுதாயத்தை காயப்படுத்தாமல் கதை சொல்லியிருக்கலாம் என்பது எனது கருத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Hindu Tamil
Image Courtesy:Asiannet Tamil