Kathir News
Begin typing your search above and press return to search.

சாமானிய மனிதர்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி ! அண்ணாமலை ட்வீட் !

எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னர், அவரது பிறந்தநாளை பாஜக வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது.

சாமானிய மனிதர்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி ! அண்ணாமலை ட்வீட் !
X

ThangaveluBy : Thangavelu

  |  17 Sept 2021 3:32 AM

எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னர், அவரது பிறந்தநாளை பாஜக வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், 71வது பிறந்த நாள் விழாவை 20 நாட்களாக பாஜக தலைமை நீட்டித்துள்ளது. இன்று பிறந்த நாளை முன்னிட்டு 1.50 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு தயார் செய்துள்ளது. மேலும், பிரதமர் மோடியின் 20 ஆண்டுகள் அரசியல் பயணத்தை போற்றுகின்ற வகையில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை மிகப்பெரிய பிரச்சாரத்தை நடத்தவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.

அதே போன்று தமிழகத்திலும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில், பாஜக சார்பில் பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்டுள்ளவர் பிரதமர் மோடி. அவரது பாதையில் நம்மை அர்ப்பணிப்போம். எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தலைமை உதவுகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source: Tn Bjp Leader Annamalai

Image Courtesy:Hindu Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News