திமுகவை விட்டு வெளியேறிய காடுவெட்டி குருவின் மகன் கணலரசன்.!
பாமகவின் மூத்த தலைவர்களில் காடுவெட்டி குருவும் இடம் பெற்றிருந்தார். அவர் உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். இதன் பின்னர் அவரது குடும்பத்தை சுற்றி விதவிதமான அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டு வந்தது.
By : Thangavelu
பாமகவின் மூத்த தலைவர்களில் காடுவெட்டி குருவும் இடம் பெற்றிருந்தார். அவர் உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். இதன் பின்னர் அவரது குடும்பத்தை சுற்றி விதவிதமான அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டு வந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில்தான் குருவின் மகன் கணலரசன், திமுகவுடன் கை கோர்த்தார். உதயநிதி ஸ்டாலினை தனது வீட்டுக்கு வரவழைத்து அவரிடம் நல்லுறவை விரும்புவதாக கணலரசன் தெரிவித்திருந்தார். கடைசி வரை திமுகவை எதிர்த்து வந்தவர் காடுவெட்டி குரு. ஆனால் மகன் இப்படி போய் திமுகவிடம் சரணடைந்து விட்டார் என்று பாமக தொண்டர்கள் மட்டுமின்றி வன்னியர்களும் புலம்பி வந்தனர்.
இந்நிலையில், திடீரென்று திமுகவிற்கு எதிராக குருவின் மகன் கணலரசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அக்கட்சி மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இடஒதுக்கீடு எங்கள் உரிமை தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை? திமுகவின் வன்னிய விரோத நடவடிக்கயால் மாவீரன் மஞ்சள் படை திமுகவிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதுடன், இந்த வன்னிய விரோத செயலை வண்மையாக கண்டிக்கிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.