காருக்கு இன்சூரன்ஸ் செய்யாமல் பரப்புரை மேற்கொள்ளும் கமல்.. நெட்டிசன்கள் கிண்டல்.!
காருக்கு இன்சூரன்ஸ் செய்யாமல் பரப்புரை மேற்கொள்ளும் கமல்.. நெட்டிசன்கள் கிண்டல்.!
By : Kathir Webdesk
தனது காரின் இன்சூரன்ஸை புதுப்பிக்காமல் நடிகர் கமல்ஹாசன் தனது காரை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதே போன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இவர் தனது பரப்புரையின்போது மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையாக டெண்டர் விடப்படும். லஞ்ச ஒழிப்பு மேல் மட்டத்திலிருந்து தொடங்கப்படும், இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கப்படும் என வாக்காளர்களிடம் கூறி வருகின்றார்.
இந்நிலையில், கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வரும் தன்னுடைய காரின் இன்சூரன்ஸ் முடிந்தும் அவர் அந்த காரை விதியை மீறி பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது கடந்த மார்ச் 6ம் தேதியே காரின் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனை மீண்டும் புதுப்பிக்காமல் கமல் ஹாசன் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் ஆவணத்துடன் போட்டோ வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. லஞ்சம் வாங்க மாட்டேன், அதை செய்வேன், இதை செய்வேன் என கூறி வரும் கமல் அவர்களே காருக்கு முதலில் இன்சூரன்ஸ் செய்துவிட்டு அரசியல் களத்தில் வரட்டும் என்றெல்லாம் கிண்டல் செய்து வருகினறனர் காண முடிகிறது.