"எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான்" என பிரச்சாரத்தை துவக்கிய கமல்.!
"எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான்" என பிரச்சாரத்தை துவக்கிய கமல்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்க ஆயத்தமாகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அனைவரையும் முந்திக்கொண்டு பிரச்சாரத்தில் குதித்துள்ளார். இன்று மதுரையில் தனது பிரச்சாரத்தை துவங்கிய கமல்ஹாசன் "எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான்" என பேசியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது, "எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான். எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றி காட்டுவேன். எம்.ஜி.ஆர் கனவை நனவாக்காமல் உறங்கிக் கொண்டுள்ள ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது. காந்தி மற்றும் பெரியார் ஆகியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை. நற்பணி செய்தால் போதும் என்று என்னால் இருக்க முடியவில்லை. ஊழல் ஆட்சியாளர்களை ஒழித்து கட்டுவதற்கு நேரம் வந்துவிட்டது" என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றியே தீருவோம். நமது ஆட்சி உறுதி. ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது ஆட்சி உறுதி. எங்கள் கட்சியின் கொள்கை, லட்சியம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் நேர்மை. நேர்மையைக் கொண்டு தேர்தலில் வெல்வேன்" என பேசினார்.