Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் என்பது முடிவல்ல: தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதிய கமல்ஹாசன்.!

வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களைத் தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தேர்தல் என்பது முடிவல்ல: தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதிய கமல்ஹாசன்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 May 2021 6:15 PM IST

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது தொண்டர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியதாவது:

உயிரே உறவே தமிழே..

நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்து விடக்கூடாது.




வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களைத் தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. வாக்குபதிவு முடிந்த மறுநாள் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை இங்கே மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.




தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பது கிடையாது என்பதை நாம் நன்கறிவோம். இந்த தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம்.. புதிய தொடக்கம்.. இந்தத் தேர்தல் பயணத்தில் மக்களுக்கு நம் மீதியிருந்த நம்பிக்கையை உணர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம். மக்கள் நலனே எதைக்காட்டிலும் முதன்மையானது.





வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை. தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். 'நாமே தீர்வு' நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அன்றாடம் வரும் அறிக்கைகள் மூலம் அறிகிறேன். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

மக்களுக்காக, மக்களுடன் களத்தில் நிற்போம்.

நாளை நமதே என்று அவர் வெளியிட்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News