Kathir News
Begin typing your search above and press return to search.

நடிப்பில் ஸ்டாலினை ‘ஓவர்டேக்’ செய்யும் கனிமொழி.. தருமபுரியில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் குட்டு அம்பலம்.!

நடிப்பில் ஸ்டாலினை ‘ஓவர்டேக்’ செய்யும் கனிமொழி.. தருமபுரியில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் குட்டு அம்பலம்.!

நடிப்பில் ஸ்டாலினை ‘ஓவர்டேக்’ செய்யும் கனிமொழி.. தருமபுரியில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் குட்டு அம்பலம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Feb 2021 12:10 AM IST

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு ஐபேக் டீம் சில வழிமுறைகளை கூறி வருகின்றது. அதன்படி அவர் செயல்பட்டு வரும் நிலையில், பென்னாகரம் அருகே தலித் பெண் விவகாரத்தால் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிகுட்பட்ட ஏரியூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கலந்து கொண்டார். அங்கு அவர் என்ன பேச வேண்டும் என்பன பற்றி அங்கு இருந்த ஐபேக் டீம் அனைத்தும் தயார் செய்து அவரிடம் ஒரு பேப்பரை வழங்கியது.

அந்த பேப்பரில் உள்ளதை மட்டும் பேசினால் போதும் என கூறியுள்ளது. இதனையடுத்து ஐபேக் டீம் அழைத்து வரப்பட்ட கூட்டத்தில் ஏராளமான பெண்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். அந்த பெண்கள் கேட்க வேண்டிய கேள்விகள் முன்கூட்டியே எழுதி தனித்தனியாக கொடுக்கப்பட்டு விட்டது. அந்த கேள்விகளை கனிமொழியிடம் கேட்க ஆரம்பித்தனர்.

அதே போன்று நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில் ஏரியூர் சந்தை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அபிதா 24 என்ற பெண், இங்கு அனைவரும் ஜாதி பார்க்கின்றனர். மேல் ஜாதி, கீழ் ஜாதி என பிரித்து பார்த்து வருகின்றனர். உங்களுக்கு ஆரத்தி எடுத்தவர்கள் அனைவரும் மேல் ஜாதிக்காரர்கள், ஆனால் கீழ் ஜாதிக்காரர்கள் யாரும் ஆரத்தி எடுக்கவில்லை என்று கண்ணீர் விட்டார். இதனையடுத்து கனிமொழி அப்பெண்ணை கட்டியணைத்து ஆறுதல் கூறுவது போன்று நாடகம் நடத்தினார்.

இதன் பின்னர் அப்பெண்ணை பேச வைத்த கனிமொழி, எங்களுக்கு வேலை வாய்ப்பு எதுவும் இல்லை, எல்லோரும் குப்பை பொறுக்கும் வேலைக்குத்தான் செல்கிறோம் என கூறினார். எங்கள் அப்பா, அம்மா கஷ்டப் பட்டு படிக்க வைத்தனர். நான் 12ம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னுடைய தந்தை இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது என்றார். அப்போது அந்த கூட்டத்திற்கு வந்த அபிதாவின் தாய், எங்கள் ஜாதியில் அனைவரும் படித்துள்ளோம். ஆனால் குப்பை பொறுக்கிதான் சாப்பிட்டு வருகிறோம் என பேசினார்.

இதனை தொடர்ந்து கனிமொழி பேசும்போது, இதனை கேள்வி படும்போது எனக்கு இன்னும் வேகமாக உழைக்க தோன்றுகிறது. இந்த கண்ணீரை துடைக்க பாடுபடுவோம் என கூறினார். இதன் பின்னர் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல் அபிதாவை ஐபேக் குழு தனியாக அழைத்து சென்றது. இதன் வீடியோவை திமுக ஐடிவிங் வெளியிட்டது. அதில அபிதா அழுவதையும், கனிமொழி ஆறுதல் சொல்வதும் இருந்தது.

இது எப்படி நடந்தது என்றால், இந்த சம்பவம் முழுக்க திமுக ஆலோசனை நிறுவனமான ஐபேக் நடத்தி நாடகம் என்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏரியூர் கூட்டத்தில் குறிப்பிட்ட காலனி பகுதி மக்கள் மட்டுமே அழைத்து வரப்பட்டு கூட்டத்தில் அமர வைக்கப்பட்டனர். அதே போன்று 10 பேர் மட்டுமே பேசுவதற்கு பட்டியலை தயார் செய்து அப்பெண்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அபிதா பெயர் இல்லை. திடீரென்று அவர் எழுந்து வந்து பேச வேண்டும் என ஐபேக் குழுவிடம் கூறியுள்ளார். அனைத்தும் அந்த குழு சொல்லிக்கொடுத்த படியே அபிதாவும் பேசியுள்ளார். இது அனைத்தும் நாடகம் என ஏரியூர் பாமக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறும்போது தமிழக அரசு பட்டியிலினத்தில் உள்ள 7 சமூகத்தை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று உருவாக்கப்பட்டது. இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்துள்ளது. இதனால் அனைத்து பட்டியிலின மக்களின் ஓட்டுகள் அதிமுக கூட்டணிக்கு சென்று விடும் என்ற நோக்கத்தில்தான் திமுக, தாழ்த்தப்பட்ட மக்களிடையே செல்வாக்கு உள்ளதை போன்று காண்பிப்பதற்காக நாடகத்தை அரங்கேற்றினர் என கூறினார்.

நடிப்பில் திமுக தலைவர் ஸ்டாலினையே, கனிமொழி ஓவர் டேக் செய்து விடுவார் என தருமபுரி மக்கள் அனைவரும் பேசி வருகின்றனர். இவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என அதிமுகவினர் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News