Kathir News
Begin typing your search above and press return to search.

பிறந்த நாளிலும் அவமானத்தை சந்திக்கும் கனிமொழி.. ட்விட்டரில் டிரெண்டாகும் #ஊழல் #ராணிக்கு பிறந்த நாள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Jan 2021 3:22 PM GMT

சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று காலை முதல் ஊழல் ராணி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது தந்தை கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.

அதன் பின்னர் அவரது அண்ணனும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில், கனிமொழியின் பிறந்த நாளையொட்டி #HBD ஊழல்_ராணி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

மேலும், அதில் கனிமொழி படம், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் படம் பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளில்கூட அவமானத்தை சந்திக்கனுமா என்று ட்விட்டர் வாசிகள் கமெண்ட் செய்து வருவதையும் காண முடிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News