100 சதவீதம் வாக்குப்பதிவு: கன்னியாகுமரியில் போலீசார் அணிவகுப்பு.!
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திருவட்டார் அடுத்துள்ள குலசேகரம் சந்தையில் இருந்து துவங்கியது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போன்று சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திட தேர்தல் ஆணையமும் தனது பங்கிற்கு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதில் முதலாவது வாக்கு இயந்திரங்கள் தயார் செய்வது, பூத் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து முடித்துள்ளது.
இதன் பின்னர் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் வாக்களிக்கும் வசதியாக காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் அணிவகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தல் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ளது.
இதனையடுத்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திருவட்டார் அடுத்துள்ள குலசேகரம் சந்தையில் இருந்து துவங்கியது.
இந்த அணிவகுப்பு நாகக் கோடு, காவஸ்த்தலம் வழியாக குலசேகரம் காவல்நிலையம் வரை நடைபெற்றது.