கன்னியாகுமரியில் மிக பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பரப்புரை.!
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் இன்று மதியம் 2 மணிக்கு வந்திறங்குகிறார்.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி முதற்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதனையடுத்து தற்போது 2ம் கட்ட பரப்புரைக்கு நேற்று இரவு தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் இன்று மதியம் 2 மணிக்கு வந்திறங்குகிறார்.
அவரை மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங், மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்கின்றனர். அதன் பின்னர் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
