கட்சி மேலிடம் நெருக்கடி கொடுக்கவில்லை.. ஆளுநர் மாளிகையில் எடியூரப்பா பேட்டி.!
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய சொல்லி பாஜக மேலிடம் நெருக்கடி செய்யவில்லை என்று ராஜினாமா செய்த பின்னர் எடியூரப்பா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய சொல்லி பாஜக மேலிடம் நெருக்கடி செய்யவில்லை என்று ராஜினாமா செய்த பின்னர் எடியூரப்பா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாடை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா இன்று வழங்கினார்.
இதன் பின்னர் அவர் அளித்துள்ள பேட்டியில், இரண்டு ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதவி ஏற்கும்போது நான் இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என்று கொடுக்கப்பட்ட உறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளேன். ராஜினாமா செய்யும் முடிவை தனது விருப்பப்படியே எடுத்துள்ளேன் எனக்கூறினார்.
தனக்கு கர்நாடகாவை 17 வருடங்கள் ஆட்சி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.