Kathir News
Begin typing your search above and press return to search.

"பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவரை ஹீரோ ஆக்காதீர்கள்" - ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம்.!

"பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவரை ஹீரோ ஆக்காதீர்கள்" - ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம்.!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவரை ஹீரோ ஆக்காதீர்கள் - ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம்.!

Mohan RajBy : Mohan Raj

  |  27 Nov 2020 6:00 PM GMT

தேர்தல் நெருங்கும் நாளுக்கு நாள் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கருத்து முரண்பாடுகள் அதிகமாகி வருகின்றன. ஏற்கனவே காங்கிரஸ் சார்பாக அதிக தொகுதிகள் கேட்க மாட்டோம் என வாக்குறுதி அளித்த நிலையில் காங்கிரஸை சேர்ந்த கார்த்தி.ப.சிதம்பரம் அவ்வபோது தி.மு.க'விற்கு கேள்விகளை எழுப்பிவருகிறார். அந்த வகையில் ஏழுவர் விடுதலை தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை கடந்த காலங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதே சமயம் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அமைச்சரவையும் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஆளுநர் தான் என்று கூறியுள்ளது சி.பி.ஐ. இதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை பயன்படுத்தி ஆளுநரை சந்தித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரியுள்ளார்.

இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அதில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை சட்ட ரீதியாக விடுவிக்க வழியிருந்தால் விடுவிக்கலாம். ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டவர்களை ஹீரோக்கள் ஆக்க கூடாது.

அதே நேரத்தில் ராஜீவ் காந்தியுடன் கொலையானவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள், ராஜீவ் காந்தியுடன் கொலையான தர்மன், சாந்தணிபேகம், ராஜகுரு, சந்திரா, எட்வர்ட், ஜோசப், முகமது இக்பால், லதா கண்ணன், ஜுட் பீட்டர்ஸ், கோகிலவாணி, முனுசாமி, சரோஜா தேவி, பிரதீப் ஆகியோரின் குடும்பத்தினருக்கு என்றைக்காவது குரல் கொடுத்து இருக்கிறார்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தேர்தலை முன்னிட்டு அதிக தொகுதிகள் வாங்க காங்கிரஸ் தீட்டும் திட்டமா? அல்லது பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் போடும் முட்டுக்கட்டையா?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News