Kathir News
Begin typing your search above and press return to search.

கருணாநிதி என்னை ஏமாற்றினார்.. பாமகவை தொடங்கியதே இற்குதான்.. ராமதாஸ் தகவல்.!

கருணாநிதி என்னை ஏமாற்றினார்.. பாமகவை தொடங்கியதே இற்குதான்.. ராமதாஸ் தகவல்.!

கருணாநிதி என்னை ஏமாற்றினார்.. பாமகவை தொடங்கியதே இற்குதான்.. ராமதாஸ் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2020 9:17 AM GMT

வன்னியர் சமுதாயத்துக்கு என்று தொடங்கப்பட்டதுதான் வன்னியர் சங்கம். இது பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. 16.7.1989ல் இந்த கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி சுமார் 31 ஆண்டுகள் கடந்துவிட்டது.


ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. இதன் பின்னர் பாமகவுக்கு 1998ம் ஆண்டு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. அப்போதிலிருந்து மாம்பழம் சின்னத்தையே கட்சியின் நிலையான சின்னமாக பாமக கொண்டுள்ளது. தமிழக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பாமக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியும் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் ராமதாஸ் பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது குறித்து இன்னமும் பாமக அறிவிப்பு வெளியிடவில்லை. இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடி வருகிறார். டிசம்பரம் 1ம் தேதி முதல் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமக நடத்தவிருக்கும் போராட்டம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது.


நேற்று நடந்த இந்த கலந்துரையாடலில், கட்சி தொடங்கியதற்கான காரணத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ராமதாஸ். இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக தான் பலமுறை சென்றுள்ளேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இட ஒதுக்கீடு போரட்டத்தின்போது 21 பேரை சுட்டுக்கொல்லப்பட்டதை சொல்லி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். 20 சதவிகித இடம் ஒதுக்கீடு மட்டும் கிடைத்திருந்தால் வன்னியர்களில் பலரும் அரசு அதிகாரிகளாக வந்திருப்பார்கள். திட்டமிட்டே நம்மை கருணாநிதி ஏமாற்றியுள்ளார் என மிகவும் கோபமாக பேசியுள்ளார்.


நல்ல பழத்தை கேட்ட எனக்கு அழுகிய கனியை கொடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 10 வருடங்களாக போராடி வந்தும் கருணாநிதி ஏமாற்றிவிட்டாரே என்ற கோபத்தில்தான் கட்சியை ஆரம்பித்தேன் என்று தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார் ராமதாஸ்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News