நல்ல கனியை கேட்டா.. அழுகிய கனியை கொடுத்தவர்தான் கருணாநிதி.. ராமதாஸ் பரபரப்பு ட்வீட்.!
நல்ல கனியை கேட்டா.. அழுகிய கனியை கொடுத்தவர்தான் கருணாநிதி.. ராமதாஸ் பரபரப்பு ட்வீட்.!
By : Kathir Webdesk
20 சதவிகித தனி இட ஒதுக்கீடு முழுக்க வன்னியர்களின் சொத்து என்றும் அதனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்காக ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அரசு பணியில் 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்குவது என்பது அவரின் நீண்டகால கோரிக்கையும் கூட. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று நகராட்சி அலுவலகம் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய போது நல்ல கனி என்று கூறி அழுகிய கனியை கொடுத்து கருணாநிதி ஏமாற்றியதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இன்று அவர் ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள பதிவில்: 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20 சதவீத இட ஒதுக்கீட்டை, கருணாநிதி சூழ்ச்சி செய்து இன்னும் கூடுதலாக 107 சாதிகளுக்கு சேர்த்து கொடுத்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
20 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் எந்த சாதியும் அதற்காக போராடவும் இல்லை, ஆதரவு குரலும் கொடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். 20 சதவீத இட ஒதுக்கீடு முழுக்க முழுக்க வன்னியர்களின் சொத்து என்றும் அதனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.