Kathir News
Begin typing your search above and press return to search.

"மு.க.அழகிரியை கருணாநிதிதான் ஒதுக்கி வைத்தார்" - அழகிரியை சீண்டும் கனிமொழி!

"மு.க.அழகிரியை கருணாநிதிதான் ஒதுக்கி வைத்தார்" - அழகிரியை சீண்டும் கனிமொழி!

மு.க.அழகிரியை கருணாநிதிதான் ஒதுக்கி வைத்தார் - அழகிரியை சீண்டும் கனிமொழி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 Feb 2021 8:20 AM GMT

மு.க.அழகிரி குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார் என கனிமொழி தெரிவித்துள்ளார். மு.க.அழகிரியால் தி.மு.க'வின் தென் மாவட்ட வாக்கு வங்கிக்கு அடி விழும் என தெரிந்ததால் மீண்டும் அழகிரியுடன் இணக்கமாக தி.மு.க செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரையில் கனிமொழி தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, "வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெறும். தளபதி முதல்வராவார்.

அ.தி.மு.க செய்யாதவற்றை செய்ததாக சொல்லி ஓட்டு கேட்கின்றனர்? தி.மு.க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறோம். தி.மு.க'வில் இருக்கக்கூடிய கூட்டணிகள் தொடரும். அப்படி ஏதாவது மாற்றங்கள் இருந்தால் தி.மு.க தலைமை முடிவு எடுக்கும். பி.ஜே.பி'யுடன் கூட்டணியில் இருப்பது தவறு என்று அ.தி.மு.க எண்ணுகிறது" என்றார்.

மேலும் மு.க.அழகிரி பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசுகையில் அவர் கூறியதாவது, "அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான். தற்போது முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மு.க.அழகிரி குறித்து ஸ்டாலின் முடிவு எடுப்பார்" என்றார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக அதிகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி மு.க.அழகிரியால் கண்டிப்பாக தி.மு.க வாக்கு வங்கிக்கு ஆபத்து வரும் என உணர்ந்துள்ளார் எனவே மீண்டும் மு.க.அழகிரியை தி.மு.க'வில் இணைக்க சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News