Kathir News
Begin typing your search above and press return to search.

லட்சக்ணக்கில் இறந்த பின்னர் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி.. நல்ல திட்டத்தை தடுக்க இன்று ஸ்டாலின் உண்ணாவிரதம்.!

லட்சக்ணக்கில் இறந்த பின்னர் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி.. நல்ல திட்டத்தை தடுக்க இன்று ஸ்டாலின் உண்ணாவிரதம்.!

லட்சக்ணக்கில் இறந்த பின்னர் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி.. நல்ல திட்டத்தை தடுக்க இன்று ஸ்டாலின் உண்ணாவிரதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2020 9:01 AM GMT

சென்னையில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழர்களுக்கும், சிங்கள ராணுவத்திற்கு போர் உச்சகட்டமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது.

அப்போதைய தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அவர் அமைதியாக போர் நடப்பதை தொலைக்காட்சிகளில் அமர்ந்து நொறுக்கு தீணிகளை சாப்பிட்டுக்கொண்டு ரசித்து வந்தார். தமிழ் பெண்களை சிங்கள ராணுவத்தினர் பாலியல் சித்ரவதை செய்து கொன்று குவித்ததை உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வந்தது. பெண் பத்திரிகையாளரை மிகவும் கொடுறமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொன்றதை உலகம் அறியும்.

இதனை அனைத்து நடக்காமல் கருணாநிதி தடுத்திருக்கலாம். மத்தியில் திமுக எம்.பியின் தயவில் ஆட்சி அமைய இருந்தது. அப்போது டெல்லிக்கு மகனுக்கு, பேரனுக்கு முக்கியமான பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று சோனியாகாந்தியிடம் சண்டையிட்டு வந்தார். இலங்கை தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. போர் இறுதியில் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்த பிரபாகரன் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது மகன் சிறு வயதிலேயே இலங்கை ராணுவத்தினர் ஈவு இரக்கமின்றி கொன்றனர்.

இதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கருணாநிதிக்கு எதிராக கோஷமிட்டனர். உருவபொம்மையை எரித்தனர். இதன் பின்னரே 2009ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதாக சென்னை மெரினா கடற்கரையில் கட்டில், மெத்தை, தலையணை வைத்துக்கொண்டு, ஏர் கூலர் உதவியுடன் ஓய்வு எடுத்து வந்தார்.

உண்ணாவிரதம் இருப்பதற்காக காலை 9.15 மணியளவில் கடற்கரைக்கு வந்தார். பின்னர் 12.30 மணியளவில் உண்ணாவிரதத்தை முடிப்பதாக ஊடகங்கள் தெரிவித்தது. அதாவது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் கருணாநிதியிடம் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இலங்கை தமிழர்களை கொல்ல மாட்டார்கள், போரை நிறுத்த சொல்லிவிட்டேன் என கூறினார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.

இதன் பின்னரே கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என்று செய்திகள் வெளிவந்தது. அடுத்த நாட்டில் நடக்கும் போரை நிறுத்தும் சக்தி படைத்தவராக கருணாநிதி இருந்தார். ஆனால் அந்த அதிகாரத்தை முன்கூட்டியே பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் பயன்படுத்தாமல் பல லட்சம் உயிர்களை பலி வாங்கிய பின்னரே கருணாநிதி நாடகத்தை அரங்கேற்றினார். இதற்கு முழு காரணமும் பதவி ஆசையேதான்.

இந்நிலையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 22வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்கட்சிகளின் தூண்டுதல் பேரில் தினமும் தங்களது போராட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக தோழமை கட்சிகள் ஆதரவு கரம் நீட்டியுள்ள நிலையில் புதிய விவசாய சட்டங்களால் பாதிப்பில்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக் கட்சியினர் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடக்கவுள்ளது. திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் விவசாயிகளுக்கு ஆதரவாக திட்டமிட்டபடி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடக்கும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதனால் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எப்படி கருணாநிதி இலங்கை தமிழர்கள் விஷயத்தில் நாடகமாடினாரா அதே போன்று மகனும் விவசாய சட்டத்தில் தனது நாடகத்தை அரங்கேற்ற உள்ளார். ஆனால் தமிழக விவசாயிகள் யாருமே நம்பவில்லை. எங்கேயோ இருக்கின்ற ஏஜெண்டுகள் வாழ்வதற்கு ஸ்டாலின் எதற்கு உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் நல்லதே என விவசாயிகள் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News