தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவை 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற கருணாஸ்.. காரணம் இதுதானாம்.!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அளிக்கப்பட்ட ஆதரவை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
By : Thangavelu
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அளிக்கப்பட்ட ஆதரவை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வலம் வந்தார். இந்த முறையும் அதிமுகவில் தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடந்தார். ஆனால் அவருக்கு அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதற்கு காரணம் சசிகலாவை சந்தித்து தனது ஆதரவை கருணாஸ் வெளிப்படையாக தெரிவித்தார்.
ஆனால் சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மீண்டும் அதிமுகவில் சீட் கிடைக்காது என்ற விரக்தியில் கருணாஸ் திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஆனால் அங்கேயும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கருணாஸ் திமுகவிற்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக இன்று மதியம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போது கருணாஸ் அதிமுகவிற்கு செல்வாரா அல்லது கமல் கட்சிக்கு செல்வாரா என்பது நாளை தெரிந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.