Kathir News
Begin typing your search above and press return to search.

#KathirExclusive பொங்கல் தொகுப்பு கலப்படத்தை மறைக்க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு: ஸ்டாலின் மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு!

#KathirExclusive பொங்கல் தொகுப்பு கலப்படத்தை மறைக்க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு: ஸ்டாலின் மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 Jan 2022 2:50 PM GMT

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல இடங்களில் கலப்படம் நடைபெற்றுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதில் இருந்து தப்பிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் இன்று ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


இது தொடர்பாக கதிர் செய்திகளுக்காக தருமபுரி அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ம.கோவிந்தசாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்ட அதிமுக கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. வீட்டில் விடியல் திமுக அரசு சோதனை செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று கடந்த பொங்கல் அன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் இந்த பொங்கலுக்கு 21 பொருட்கள் என்று வழங்கிவிட்டு அதனை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி வழங்கியுள்ளனர். தமிழகத்தில் வாங்கினால் ஊழல் கண்டுப்பிடித்து விடுவார்கள் என்பதால் பொங்கல் பரிசு தொகுப்பினை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கியுள்ளனர்.


மேலும் வரப்போகின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் அதிமுக 10 பேரூராட்சி மற்றும் ஒரு நகராட்சியை கைப்பற்ற உள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத விடியல் திமுக அரசு முன்னாள் அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனை தருமபுரி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக கடும் கண்டத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறும்போது, அதிமுக இயக்கத்தை திமுக அழித்துவிடலாம் என்று கணவு காண்கிறது. அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்துவது ஒவ்வொரு தமிழரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே திமுக பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளனர். தற்போது பொதுமக்கள் கேள்வி கேட்க தொடங்கியிருப்பதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தி அதனை மறைக்க முயற்சி செய்கிறார் ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News