எங்கள் வீட்டில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்க தி.மு.க அரசு யார் - கொந்தளித்த எஸ்.ஜி.சூர்யா !
SG Surya Condemns DMK Goverment

By : Mohan Raj
"எங்கள் வீட்டில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்க தி.மு.க அரசு யார்?" என பா.ஜ.க'வின் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட தி.மு.க அரசு தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல இந்துக்கள் தி.மு.க'விற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்
இந்நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க'வின் எஸ்.ஜி.சூர்யா விடுத்துள்ள அறிக்கையில், "வீடுகளில் விநாயக கடவுளை வைத்து வழிபடுவது என்பது இந்திய அரசியல்சாசனம் எங்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை. அதற்கு தி.மு.க ஆளும் தமிழக அரசு "விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம்" என அனுமதி கொடுத்து இருப்பது வேடிக்கையாக உள்ளது" எங்கள் வீட்டில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்க தி.மு.க அரசு யார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
