Kathir News
Begin typing your search above and press return to search.

அறிவாலய ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளர் கி.வீரமணி'க்கு வெட்கமாக இல்லை - வெளுத்து வாங்கும் பெ.மணியரசன் !

Breaking News.

அறிவாலய ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளர் கி.வீரமணிக்கு வெட்கமாக இல்லை - வெளுத்து வாங்கும் பெ.மணியரசன் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 Sept 2021 5:45 PM IST

"தமிழர் தலைவராம் வீரமணி. இதை சொல்ல வெட்கமாக இல்லை?" என தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமானவர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன் சென்னை பேரூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமானவர் பெ.மணியரசன் கூறியதாவது, "வீரமணி என்கிறவர் கிளம்பி இருக்கிறார். அறிவாலய ஒட்டுத்திண்ணை குடியிருப்பாளர். அவரது இயக்கத்திற்கு என்ன பேர் தெரியுமா? திராவிட இயக்க தமிழர் பேரவை. அது என்ன கருவாட்டுச் சாம்பார். சரி அப்படி தான் இருக்கிறது திராவிடம். அதை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே. அப்புறம் எதற்கு தமிழர் என்கிற பெயரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்? பத்தரை மாதத்து தங்கம் திராவிடர் கழக தலைவர் வீரமணி. அவருக்கு என்ன பட்டம்? தமிழர் தலைவர் வீரமணி. தமிழர் தான் கலப்படம், போலியாச்சே.

அந்தப் பட்டத்தை நாங்கள் வைத்துக் கொள்கிறோம். நீங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும்? கலப்படம் போலி, அந்தப் பட்டம் சரியில்லை. திராவிடம் தான் ஒரிஜினல். ஜெயலலிதாவுக்கு சமூகநீதிகாத்த வீராங்களை என்கிறப் பட்டம் கொடுக்கிற அளவுக்கு திராவிடம் ஒரிஜினல். தமிழர் தலைவராம் வீரமணி. வெட்கம் இல்ல. நீ திராவிடத்தை வைத்துக் கொள். ஆனால் தமிழர் தலைவர் என்கிற பட்டத்தை துறந்து விடவேண்டும்.

ஏமாளிக்கூட்டமாக நம்மை நினைக்கிறார்கள். நம்ம ஆதரவு, நம்ம பணம், நம்ம வாக்கு என எல்லாம் வேண்டும். ஆனால் சேவை வேறு இடத்திற்கு போய்விடும். தமிழை வளர்த்தோம் என தி.மு.க, தி.க கூறுவதெல்லாம் பொய்'' என காட்டமாக தெரிவித்தார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News