கேரளா முதலமைச்சர் வேட்பாளர் 'மெட்ரோ ஸ்ரீதரன்' பா.ஜ.க. அறிவிப்பு.!
கேரள மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ‘மெட்ரோ ஸ்ரீதரன்’ பாஜக அறிவித்துள்ளது.
By : Thangavelu
கேரள மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக 'மெட்ரோ ஸ்ரீதரன்' பாஜக அறிவித்துள்ளது.
கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அம்மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனியாகவும், காங்கிரஸ் தனியாகவும் போட்டியிடுகிறது. இதில் பாஜக வேகமாக அம்மாநிலத்தில் வளர்ந்து வருகிறது.இதனால் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தி பெரும் புகழ் பெற்றவர் ஸ்ரீதரன். அது மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டங்களில் நிர்வாகியாக இருந்தார். இதன் காரணமாக அவரது பெயர் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் என்றே அழைக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீதரன் சமீபத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து அவரை கேரளா மாநில பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே முதலமைச்சர் வேட்பாளராக ஸ்ரீதரனை அறிவித்தது அம்மாநில அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.