Kathir News
Begin typing your search above and press return to search.

பழனியில் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. தமிழகத்திற்கு மிகப்பெரிய தலை குனிவு.. ராமதாஸ் கடும் கண்டனம்.!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு கடந்த 19ம் தேதி கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அப்பெண்ணை கடத்தி அருகில் உள்ள தங்கும் விடுதியில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பழனியில் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. தமிழகத்திற்கு மிகப்பெரிய தலை குனிவு.. ராமதாஸ் கடும் கண்டனம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 July 2021 8:48 AM GMT

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு கடந்த 19ம் தேதி கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அப்பெண்ணை கடத்தி அருகில் உள்ள தங்கும் விடுதியில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அப்பெண் பழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் குறித்து விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் கேரளாவுக்கு சென்றுள்ளார். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது மருத்துவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கண்ணூர் போலீசார் கேரளா டிஜிபிக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக கேரளா டிஜிபி அனில்குமார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு கடிதம் மூலமாக சம்பவத்தை தெரியபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், பழனி கோயிலில் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பான ட்விட் ஒன்றை செய்துள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19ம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான். இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News