Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் போராட்டம் திசை திரும்பிய பின்னணியில் காலிஸ்தான் தீவிரவாதிகள்?

விவசாயிகளின் போராட்டம் திசை திரும்பிய பின்னணியில் காலிஸ்தான் தீவிரவாதிகள்?

விவசாயிகளின் போராட்டம் திசை திரும்பிய பின்னணியில் காலிஸ்தான் தீவிரவாதிகள்?
X

Saffron MomBy : Saffron Mom

  |  1 Dec 2020 6:51 PM GMT

இந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த விவசாய மசோதாவுக்கு எதிராக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்களைத் தொடங்கினர். ஆரம்பத்தில் அவர்களது நியாமான கோரிக்கைகள் முன்வந்தாலும், தற்போது அதனை அரசியல் கட்சிகளும் மற்றும் காலிஸ்தான் அமைப்பும் பயன்படுத்தி போராட்டத்தைத் திசை திருப்பி வருகின்றது.

இது தற்போது இந்திரா காந்தி படுகொலை சம்பவம் போன்றே பஞ்சாபில் இருக்கும் போராட்டக்காரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல் தெரிய வருகின்றது. மேலும் போராட்டக்காரர்கள் வைத்திருந்த சுவரொட்டிகள் சிலவற்றில் ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேவின் போன்றவை காணப்பட்டது.

டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாய மசோதாவுக்கு எதிராக 10,000 திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சாபிலிருந்து புறப்பட்டனர். இருப்பினும் அவர்கள் சிங்கு எல்லையில் வைத்து டெல்லி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர், அதிலிருந்து போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. அதன் விளைவாகக் கல் வீச்சு, காவல்துறையை லத்தியால் தாக்குவது மற்றும் சிலர் வாள்கள் வைத்திருப்பதும் தொடர்ந்தது. இதுபோன்ற சம்பவங்களுக்கு பிறகும், போராட்டக்காரர்களை நாடாளுமன்றத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புராரி பகுதியில் போராட்டத்தை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த போராட்டத்தில் ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பும் கலந்து கொண்டது, இருப்பினும் அதிக நபர்கள் பஞ்சாபிலிருந்து கலந்து கொண்டுள்ளனர்.

மூன்று விவசாய மசோதாக்களைச் செப்டம்பர் 27 2020 இல் மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அதில் முதல் மசோதா விவசாய உற்பத்தி சந்தை குழுவுடன் (APMC) தொடர்புடையது. இதன் மூலம் விவசாயிகள் அரசாங்க மண்டிகள் தவிரப் பிற நபர்களுக்கும் பயிர்களை விற்க முடியும். மேலும் பிற மாநிலங்களுக்கு இவர்களுக்கு உற்பத்தியை விற்கவும் வழி செய்கிறது. இதன் முக்கிய சிறப்பாக விவசாயிகளின் உற்பத்திகளை இணையத்தில் விற்கவும் அனுமதியளித்துள்ளது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசின் தற்போதைய நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரக் கேட்கின்றனர். மேலும், இந்த மண்டிகளில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் 13 சதவீதம் பஞ்சாப் அரசாங்கத்துக்கு குறைந்துள்ளது. மண்டிகளில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்களும் நிறுத்தப்படக் கூடும் என்னும் வாக்குவாதமும் சென்று கொண்டிருக்கின்றது.

போராட்டக்காரர்களின் வன்முறை தன்மைக்கு பின்னணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் அகாலிதளம் போன்ற அரசியல் கட்சிகளின் சுயநல எண்ணங்களும் தெளிவாக வெளிப்படுகின்றது. இதில் குறிப்பாக காலிஸ்தான் அமைப்பும் போராட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்குப் போராட்டங்களைத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது. இதன் முக்கிய காரணம் அரிசி மற்றும் கோதுமை அதிக அளவில் ஹரியானா மற்றும் பஞ்சாபில் விளைகின்றது. பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளூர் சந்தைகளை மனதில் வைத்து விவசாயத்தில் பல நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். பால் மற்றும் தேனீ வளர்ப்பு போன்ற விவசாயத்தையும் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் செய்யத் தவறியுள்ளனர். அவர்கள் தற்போது மற்ற பயிர்களை உற்பத்தி செய்ய எண்ணினாலும் அதற்குத் தேவையான வசதிகள் அங்குக் குறைவாகவே உள்ளன.

மேலும் பஞ்சாபில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயத்தின் புதிய நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை இல்லாமல் இருப்பது இருந்தாலும் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யத் தவறியதும் மாநில அரசாங்கத்தின் மேல் உள்ளது. அதன் விளைவாகவே போராட்டங்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன.

இந்த போராட்டங்களைப் பாகிஸ்தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு, நாட்டின் அமைதியைக் கெடுக்க இந்த போராட்டத்தில் காலிஸ்தான் அமைப்பைக் கொண்டுவர முயற்சி செய்கின்றது. டெல்லி எல்லையில் பிரதமருக்கு எதிராக எழுதிய முழக்கங்கள் மற்றும் ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேவின் சுவரொட்டிகள் மூலம் ஏற்கனவே காலிஸ்தான் அமைப்பு ஊடுருவி உள்ளது தெரிகின்றது. வெளிநாடுகளில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகின்றது. இந்த நிகழ்வுகளில் அனைவரையும் நம்பிக்கையில் கொண்டு செல்வது மத்திய அரசாங்கத்தின் முக்கிய வேலையாக இருக்கின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News