"காவிரி பிரச்சினை இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ்" - தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு'வின் பலே புரிதல்
தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு'வின் பலே புரிதல்.

காவிரி பிரச்சனையை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க" என பதிலளித்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு, காவிரி பிரச்சனையை இண்டர்நேஷனல் பிரச்சனை என குறிப்பிட்ட தி.மு.க அமைச்சரின் அறியாமையை கண்டு மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மேகதாதுவில் ககர்நாடகம் அணை கட்டுவதை கண்டித்து தமிழகத்தில் பா.ஜ.க முழு வீச்சில் போராடி வருகிறது. அதேசமயத்தில் தி.மு.க'வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக பா.ஜ.க'வை அரசியல் காரணங்களுக்காக விமர்சித்து வருகின்றனர். காரணம் மக்கள் மத்தியில் தமிழக பா.ஜ.க அணை விவகாரத்தில் தலையிட்டு நல்லது செய்வதை ஆளும் தி.மு.க அரசு விரும்பவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேருவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு, "இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க. ஒன்லி திருச்சி பாலிடிக்ஸ் மட்டும் கேளுங்க. இந்திய அளவில் இருக்கிறதை முதலமைச்சர் சொல்ல வேண்டும். நான் இந்த தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ., ஒரு மந்திரி. நான் இந்த தொகுதிக்காக வேலை செய்ய வந்திருகிறேன்'' என்று ஒரே போடாக போட்டார். கேள்வி கேட்ட செய்தியாளர்களே குழம்பினர்.
தமிழகம் தண்ணீருக்காக கர்நாடாவிடம் எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில் ஆளும் கட்சி தி.மு.க'வின் அமைச்சரே காவிரி பிரச்சனையை இண்டர்நேஷனல் பிரச்சனை என கூறியது மட்டுமின்றி அந்ந கேள்விக்கு கூட பதிலளிக்காமல் ஒதுங்கியது இத்தனை ஆண்டுகளாக காவிரி பிரச்சினையை தி.மு.க கையாண்ட விதத்தை காட்டுகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.