Begin typing your search above and press return to search.
குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் வருமா? இல்லை பல்பு'தானா? - விளக்கமளித்த கே.என்.நேரு !

By :
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்னவாயிற்று என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் அது பற்றி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "தி.மு.க அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கு திட்டம் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்" என பதிலளித்துள்ளார்.
மக்கள் மறந்துவிடுவார்கள் என முப்பது ஆண்டுகளுக்கு முன் உள்ளபடி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த தி.மு.க இப்பொழுது மக்கள் கேள்வி எழுப்பிய உடன் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
Next Story