Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: திறனற்ற அரசினால் மக்களுக்கு தொடர் அச்சம்!

கோவையில் காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய பா.ஜ.க கோரிக்கை.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: திறனற்ற அரசினால் மக்களுக்கு தொடர் அச்சம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Oct 2022 2:28 AM GMT

கோவையில் காரில் சிலிண்டர் வடித்த உயிரிழந்தவரின் பெயரை போலீசார் வெளியிட்டு இருக்கிறார்கள். அவர் 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜமேஜா என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலால் திட்டமிடப்பட்ட ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் இதை சொல்வதற்கு மு.க.ஸ்டாலின் தயங்குவது ஏன்? தேசவிருத்த பயங்கரவாத கும்பலால் இப்படிப்பட்ட சதி திட்டத்தை திருப்பி பண்டிகை நாளன்று ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் குண்டு வெடிக்க வைத்து உயிரைக் கொல்லும் வரை உளவுத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது.


குறைந்தபட்ச பாதுகாப்பு கூட வழங்க முடியவில்லை. எனில் தமிழக போலீஸ் துறை மக்களுக்கு என்ன பயன்? உளவுத்துறை என்றும் பிரிவு தமிழகத்தில் பெயரளவில் மட்டும் தான் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் உறவு துறையின் தோல்வியின் வெளிப்பாடு. முதல்வர் தன்னை சுய பரிசோதனைக்கு உள்ளாக்கி கொள்ள வேண்டும்.


தன் தலைமையிலான இந்த அரசு திறனற்ற தன்மையினால் மக்களுக்கு தொடர் அச்சம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? திறனற்ற தி.மு க அரசு மக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு அச்சுறுத்தலாகும் மாறிவிட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு அனைவரையும் போலீஸ் துறை தயவு தாட்சனை இன்றி கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க அண்ணாமலை தலைவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Input & Image courtesy: India Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News