Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை: பட்டாசுகளை கொளுத்தி வீடுகளில் வீசி அராஜகம் செய்யும் தி.மு.க.வினர்.!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் கோவையில் திமுகவினர் அராஜக செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ள சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: பட்டாசுகளை கொளுத்தி வீடுகளில் வீசி அராஜகம் செய்யும் தி.மு.க.வினர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 May 2021 2:14 PM IST

சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் கோவையில் திமுகவினர் அராஜக செயலில் ஈடுபடத் தொடங்கியுள்ள சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலங்களில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதனால் தங்களின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத திமுகவினர் பல்வேறு இடங்களில் அராஜகம் செய்யும் நிலையிலேயே உள்ளனர். அந்த வகையில், கோவை மதுக்கரை பேரூராட்சி கழக துணை செயலாளராக இருப்பவர் ஜோசப், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதி கழக வேட்பாளர் வெற்றிக்கு நிர்வாகிகளுடன் இணைந்து களத்தில் பணியாற்றினார்.

இதனால் பெரும்பாலான கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் ஓட்டு கழகத்திற்கு கிடைத்தது. இதனால் திமுகவினர் ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் இப்பகுதியில் திமுகவினர் அராஜக செயலில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.





இந்நிலையில், சம்பவத்தன்று காலை மதுக்கரை மேட்டாங்காடு பகுதியில் உள்ள ஜோசப் வீட்டிற்கு முன் திமுகவை சேர்ந்த சிலர் வந்து அவரின் வீட்டு வாசலில் பட்டாசுக்களை வெடித்து பெண்களை அச்சுறுத்தியுள்ளனர்.

அப்போது வீட்டிலிருந்த பெண்கள் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து இப்படியெல்லாம் செய்வது சரியல்ல என்று கேட்டுள்ளனர். இதனால் அங்கிருந்து அவர்கள் சென்று விட்டனர். பின்னர் மாலை 7 மணிக்கு மீண்டும் திமுகவை சேர்ந்த ஆசிக், சியாத், நவாப், சாகுல் மற்றும் சவுக்கத் ஆகியோர் ஜோசப் வீட்டிற்கு வந்து அவரது வீட்டு முன் வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிளக்ஸை எரித்து பட்டாசுகளை வீட்டிற்குள் எறிந்துள்ளனர்.

இதில் அங்கிருந்த பெண்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் அச்சத்தில் உறைந்துள்ளார். இது போன்ற அராஜக செயலை தமிழக அரசு கட்டுப்படுத்துமா? சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா, அல்லது கைகட்டி வேடிக்கை பார்த்து அராஜகத்தை ஊக்குவிப்பார்களா? என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் மட்டும் அதிமுக கூட்டணி 10 இடங்களையும் கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News