ப.சிதம்பரத்துக்கு மட்டும் எம்.பி. பதவியா! விரக்தியில் கே.எஸ்.அழகிரி!
By : Thangavelu
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் மீண்டும் அறிவிக்கப்பட்டு இன்று (மே 30) மனுத்தாக்கலும் செய்துள்ளார். இப்பதவியை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற முயற்சியிலும் கடைசி வரையிலும் போராடியவர் ப.சிதம்பரமும், கே.எஸ்.அழகிரியும் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காக இருவரும் டெல்லியிலேயே முகாமிட்டு காய்களை நகர்த்தி வந்தனர். இரண்டு பேரும் தனித்தனியாக சோனியாவை சந்தித்து தனக்கு எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை பொறுத்தமட்டில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்று உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.
தமிழகத்தில் யார் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றாலும் உடனடியாக அவரை மாற்ற வேண்டும் என்கின்ற போர்க்கொடி எப்போதும் ஒலித்தது. ஆனால் தற்போது கே.எஸ்.அழகிரிக்கு அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எப்படியும் தற்போது தனக்கு எம்.பி. சீட் வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துவிடும் என்று அழகிரி கருதினார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவருக்கு பதில் ப.சிதம்பரத்துக்கு சீட் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் கே.எஸ்.அழகிரி மிகுந்த ஏமாற்றத்துடன் தமிழகம் திரும்பியுள்ளார்.
Source: Maalaimalar
Image Courtesy:The New Indian Express